“காந்தாரா 2” ரிலீஸுக்கு பிறகு “ஜெய் ஹனுமான்” படப்பிடிப்பு - ரிஷப் ஷெட்டி

ரிஷப் ஷெட்டி நடிக்கும் ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“காந்தாரா 2” ரிலீஸுக்கு பிறகு “ஜெய் ஹனுமான்” படப்பிடிப்பு - ரிஷப் ஷெட்டி
Published on

ரிஷப் ஷெட்டி, இயக்கி, நடித்துள்ள காந்தாரா: சாப்டர் 1 படத்தில் ருக்மனி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகிறது. இதையடுத்து ஜெய் ஹனுமான் என்ற படத்தில் நடிக்கிறார் ரிஷப் ஷெட்டி. இதை ஹனுமன் பிரசாந்த் வர்மா இயக்குகிறார்.

பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக உருவாகிறது. காந்தாரா: சாப்டர் 1 ரிலீஸ் ஆவதை ஒட்டி, ஜெய் ஹனுமான் படம் பற்றி ரிஷப் ஷெட்டி பேசியுள்ளார். அவர் கூறும்போது, காந்தாரா: சாப்டர் 1 ரிலீஸுக்கு முன் வேறு படங்களில் ஒப்பந்தமாக வேண்டாம் என்று நினைத்திருந்தேன். பிரசாந்த் வர்மா கதை சொன்னபோது, மறுக்க முடியவில்லை. உடனடியாக ஒப்புக் கொண்டேன். நாங்கள் ஒரு போட்டோஷூட்டையும் நடத்தினோம். அந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. காந்தாரா: சாப்டர் 1 ரிலீஸுக்கு பிறகு இதன் படப்பிடிப்பை இறுதி செய்து தொடங்குவோம் என்றார்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க இருக்கும் இப்படம், 2027-ம் ஆண்டு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடித்து கடந்த வருடம் வெளிவந்த தெலுங்குப் படமான ஹனுமான் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com