'ரமணா' லொகேஷனில் எஸ்.கே.23 படப்பிடிப்பு - புகைப்படம் வைரல்

எஸ்.கே.23 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
'ரமணா' லொகேஷனில் எஸ்.கே.23 படப்பிடிப்பு - புகைப்படம் வைரல்
Published on

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது தமிழ்த் திரையுலகில் ஏராளமான பிளாக்பஸ்டர் படங்களை வழங்கிய ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே.23 படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், படம் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டு உள்ளார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

மறைந்த நடிகர் விஜயகாந்தை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய 'ரமணா' திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு முக்கியமான காட்சி எடுக்கப்பட்ட ரெயில் நிலையத்தில் தான் தற்போது முருகதாஸ் எஸ்.கே23 படப்பிடிப்பிற்காக சென்றுள்ளார்.

இது குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்த பதிவில், எஸ்.கே23 படப்பிடிப்பிற்காக எனது 'ரமணா' படத்தில் இடம்பெற்ற பிரபலமான இடத்திற்கு 23 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப வந்திருக்கிறேன். எல்லாம் தொடங்கிய இடத்திற்கே மீண்டும் திரும்பியிருப்பது மிக யதார்த்தமாக உள்ளது என நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com