"லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு" படத்தின் படப்பிடிப்பு.. பூஜையுடன் துவக்கம்


லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு படத்தின் படப்பிடிப்பு.. பூஜையுடன் துவக்கம்
x
தினத்தந்தி 6 Nov 2025 9:15 AM IST (Updated: 31 Dec 2025 10:07 AM IST)
t-max-icont-min-icon

இதனை இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்க உள்ளார்.

`அனகனகா ஒ அதிதி', தமிழில் `கொன்றால் பாவம்', `மாருதிநகர் காவல்நிலையம்' போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் தயாள் பத்மநாபன். இவர் தற்போது, உண்மை சம்பவமான லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கை மையமாக கொண்டு அதே பெயரில் ஒரு படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது. சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற உள்ளன.

இதில், வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், லொள்ளு சபா மாரண், இளவரசு மற்றும் கவிதா பாரதி ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்த படம் ஒரு சாதாரண குற்றக் கதை அல்ல. இது தமிழ் சினிமா வரலாற்றில் நடந்த உண்மைச் சம்பவத்தை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பதிவு செய்கிறது" என்று இயக்குனர் தயாள் பத்மநாபன் கூறியுள்ளார்.

1 More update

Next Story