நடிகருடன் எனக்கு திருமணமா? ரகுல் பிரீத் சிங்

“நான் நடிகரை காதலிப்பதாக வெளியான தகவல் உண்மை இல்லை. திருமண ஏற்பாடுகளும் நடக்கவில்லை என ரகுல் பிரீத் சிங் பதில் அளித்துள்ளார்.
நடிகருடன் எனக்கு திருமணமா? ரகுல் பிரீத் சிங்
Published on

தமிழில் கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், சூர்யாவுடன் என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்து பிரபலமான ரகுல் பிரீத் சிங் தற்போது சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடித்து வருகிறார். போதை பொருள் வழக்கில் அவர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தது பரபரப்பானது. இந்த நிலையில் ரகுல் பிரீத் சிங் நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும் அவருடன் திருமண ஏற்பாடுகள் நடப்பதாகவும் வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதற்கு பதில் அளித்துள்ள ரகுல் பிரீத் சிங், நான் நடிகரை காதலிப்பதாக வெளியான தகவல் உண்மை இல்லை. திருமண ஏற்பாடுகளும் நடக்கவில்லை. இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை. தனியாகத்தான் இருக்கிறேன். எனக்கு எப்போது திருமணம் நடந்தாலும் அது பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என்றார். மேலும் அவர் கூறும்போது, தமிழ், தெலுங்கு, இந்தியில் கைநிறைய படங்கள் வைத்து நடித்து வருகிறேன். இந்த படங்கள் அடுத்த வருடம் திரைக்கு வரும் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com