சால்வையை தூக்கி எறிந்தது என்னுடைய தவறுதான்: வருத்தம் தெரிவித்த நடிகர் சிவக்குமார்

சிவக்குமாருக்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.
சால்வையை தூக்கி எறிந்தது என்னுடைய தவறுதான்: வருத்தம் தெரிவித்த நடிகர் சிவக்குமார்
Published on

 சென்னை,

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் பழ.கருப்பையா எழுதிய "இப்படித்தான் உருவானேன்" நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் நடிகர் சிவகுமார் மற்றும் பழ.நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து நிகழ்ச்சியின் முடிவில் விழாவில் கலந்து கொண்ட சிவகுமாருக்கு வயதான ஒருவர் சால்வை கொண்டு வந்து கொடுத்தார். அதை சிவகுமார் பிடுங்கி தூக்கி எறிந்துவிட்டு சென்றார் . இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. சிவக்குமாருக்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் சிவக்குமார் , சால்வை கொடுத்த நபருடன் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

அதில்,

நான் சால்வையை தூக்கி எறிந்த நபர் வேறு யாருமில்லை. நாங்கள் இருவரும் 50 ஆண்டு கால நண்பர்கள் எனக்கு அவர் சகோதரர் மாதிரி. பொது இடத்தில சால்வை அணிவிப்பது எனக்கு பிடிக்காது. ஆனாலும் பொது இடத்தில சால்வையை தூக்கி எறிந்தது  என்னுடைய தவறு. மன்னிப்பு கேட்கிறேன். என்று சிவகுமார் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com