திருமணத்துக்கு பிறகு கவர்ச்சி காட்டக்கூடாதா? - நடிகை ரகுல் பிரீத் சிங்


திருமணத்துக்கு பிறகு கவர்ச்சி காட்டக்கூடாதா? - நடிகை ரகுல் பிரீத் சிங்
x
தினத்தந்தி 25 July 2025 7:15 AM IST (Updated: 25 July 2025 7:15 AM IST)
t-max-icont-min-icon

திருமணத்துக்கு பிறகு கவர்ச்சி காட்டக்கூடாது என்று சட்டம் இல்லை என்று நடிகை ரகுல் பிரீத் சிங் கூறியுள்ளார்.

சென்னை,

தென்னிந்திய படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் ரகுல் பிரீத் சிங். இவர் தமிழில் "தடையற தாக்க, என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, இந்தியன் 2, அயலான்" உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது அஜய் தேவ்கன் மற்றும் ஆர்.மாதவனுடன் இணைந்து 'தே தே பியார் தே 2' என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

இவர் கடந்த 2024 ஆம் பிப்ரவரி மாதம் இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், கவர்ச்சியிலும் கவனம் ஈர்க்கிறார். நடிகையின் சமீபத்திய கவர்ச்சி படங்கள் இணையத்தைக் கலக்கி வருகிறது.

'திருமணத்துக்கு பிறகு கவர்ச்சி காட்டக்கூடாது என்று சட்டம் இல்லை. நடிகைகளின் திறமையை யாரும் தடுத்து விடமுடியாது. கவர்ச்சியை ரசிப்பதில் தவறு கிடையாது', என்கிறார் ரகுல் பிரீத் சிங்.

1 More update

Next Story