பரசுராமாவாக விக்கி கவுசல்… ஜோடியாக ஷ்ரத்தா? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு

'மகாவதாரம்' படத்தை அமர் கவுசிக் இயக்குகிறார்.
பரசுராமாவாக விக்கி கவுசல்… ஜோடியாக ஷ்ரத்தா? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு
Published on

சென்னை,

பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல். இவர் தற்போது சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கத்தில் 'லவ் அண்ட் வார்' படத்திலும் அமர் கவுசிக் இயக்கத்தில் 'மகாவதாரம்' படத்திலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் 'மகாவதாரம்' படத்தில் பரசுராமராக நடிக்கும் விக்கி கவுசலின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. இப்படம் இந்தாண்டு கிரிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

Also Read
மாதவிடாயை பெண்கள் ஒரு பிரச்சனையாக பேசுவது சரியா? - நடிகை ஸ்ரீலீலா
பரசுராமாவாக விக்கி கவுசல்… ஜோடியாக ஷ்ரத்தா? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்நிலையில், இப்படத்தில் விக்கி கவுசலுக்கு ஜோடியாக நடிக்க ஷ்ரத்தா கபூர் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாதபோதிலும், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அமர் கவுசிக் சமீபத்தில் ஷ்ரத்தா கபூர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த ஸ்ட்ரீ 2 படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com