நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு: ஷ்ரத்தா கபூர், சாரா அலி கானுக்கு விரைவில் நோட்டீஸ்

நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் ஷ்ரத்தா கபூர், சாரா அலி கானுக்கு போதைப்பொருள் போலீசார் விரைவில் நோட்டீஸ் அனுப்ப உள்ளனர்.
நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு: ஷ்ரத்தா கபூர், சாரா அலி கானுக்கு விரைவில் நோட்டீஸ்
Published on

புதுடெல்லி:

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ஜூன் 2020 இல் தனது குடியிருப்பில் மர்மமான முற்றையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் குறித்து வெவ்வேறு கோணங்களில் சிபிஐ, போதை தடுப்பு போலீசார் மற்றும் அமலாக்கப்ப்பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக ரியா சகரபோர்த்து, ஷோயிக், தீபேஷ் சாவந்த், சாமுவேல் மிராண்டா மற்றும் ஒரு சில போதைப்பொருள் ஆசாமிகளை போதை தடுப்பு போலீசார் கைது செய்து உள்ளனர்.

இதற்கிடையில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்துடன் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கில் விசாரிக்க சாரா அலிகான் மற்றும் ஷ்ரத்தா கபூருக்கு போதை தடுப்பு போலீசார் நோட்டீஸ் அனுப்ப உள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com