குத்து பாட்டுக்கு ஆட ரூ.1 கோடி கேட்கும் ஸ்ரேயா

குத்து பாட்டுக்கு ஆட ரூ.1 கோடி கேட்கும் ஸ்ரேயா
Published on

தமிழ் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ஸ்ரேயா திருமணத்துக்கு பிறகு சில காலம் ஒதுங்கி இருந்து விட்டு இப்போது மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார். சமீபத்தில் ஸ்ரேயா நடிப்பில் கப்ஜா படம் பல மொழிகளில் வெளியானது. இந்த நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் படமொன்றில் குத்துப்பாடலுக்கு மட்டும் நடனம் ஆட ஸ்ரேயாவை அணுகினர். அதற்கு ஸ்ரேயா ரூ.1 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு பாடலுக்கு ஆட ரூ.1 கோடியா என்று படக்குழுவினர் அதிர்ந்து போய் இருக்கிறார்களாம். இப்போதெல்லாம் எந்த மொழியில் படங்களை எடுத்தாலும் அதை பல மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியிட்டு அதிக வருமானம் பார்க்கிறார்கள். இதை மனதில் வைத்தே ஸ்ரேயா ரூ.1 கோடி கேட்பதாக கூறப்படுகிறது. கேட்டதை கொடுத்து ஆட வைக்கலாமா அல்லது வேறு நடிகையை பார்க்கலாமா என்று படக்குழுவினர் யோசிக்கிறார்கள்.

பொதுவாக முன்னணி நடிகர்கள் படங்களில் குத்துப்பாடல்கள் வைப்பது அவசியமாகி விட்டது. அதை ரசிப்பதற்கு தனி கூட்டமே உள்ளது. புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய ஊ சொல்றியா மாமா குத்துப்பாடல் பெரிய வரவேற்பை பெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com