முத்த காட்சி நீக்கம்...தணிக்கை குழுவை கடுமையாக சாடிய நடிகை

'சூப்பர்மேன்' படத்தில் 33 விநாடி முத்தக் காட்சியை நீக்கியது அர்த்தமற்றது என நடிகை ஷ்ரேயா தன்வந்தரி தெரிவித்திருக்கிறார்.
சென்னை,
'சூப்பர்மேன்' படத்தின் இந்திய வெர்ஷனில் இடம்பெற்ற 33 விநாடி முத்தக் காட்சியை நீக்கியது அர்த்தமற்றது என நடிகை ஷ்ரேயா தன்வந்தரி தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தணிக்கை குழுவின் இச்செயல் அர்த்தமற்றது என்ற அவர், படம்பார்க்க தங்கள் பணத்தையும் நேரத்தையும் செலவிடும் நாங்கள்தான் எதை பார்க்க வேண்டும், எதை பார்க்கக் கூடாது என்பதை முடிவெடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
'மார்வெல்' நிறுவனத்திற்காக 'கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜேம்ஸ் கன், தற்போது டி.சி. நிறுவனத்துக்காக புதிய 'சூப்பர் மேன்' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் 'சூப்பர் மேன்' கதாபாத்திரத்தில் நடிகர் டேவிட் கோரன்ஸ்வெட் நடித்துள்ளார். 'லெக்ஸ் லூதர்' என்ற வில்லனாக நிக்கோலஸ் ஹோல்ட், கதாநாயகி லூயிஸ் லேன் கதாபாத்திரத்தில் ரச்சேல் புரோஸ்நாகன் ஆகியோர் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் கடந்த 11-ந்தேதி வெளியானது.






