40 வயதிலும் எல்லை மீறும் ஸ்ரேயா

ஸ்ரேயா வெளியிட்ட எல்லை மீறிய கவர்ச்சி படம் ரசிகர்களையே அதிர்ச்சி அடைய செய்தது.
40 வயதிலும் எல்லை மீறும் ஸ்ரேயா
Published on

'எனக்கு 20 உனக்கு 18' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஸ்ரேயா. 'மழை', 'கந்தசாமி', 'சிவாஜி', 'குட்டி', 'அழகிய தமிழ் மகன்' என பல படங்களில் நடித்துள்ளார். திரைக்கு வந்த குறுகிய காலத்திலேயே முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து கவனம் ஈர்த்தார்.

2018-ம் ஆண்டில் ரஷிய நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரூ கோஷீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. தற்போது 40 வயதை கடந்தாலும் ஸ்ரேயாவின் அழகு குறையாமலேயே இருக்கிறது.

இதனால் தனது அழகை வெளிக்காட்டும் படங்களை தொடர்ந்து அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட எல்லை மீறிய கவர்ச்சி படம் ரசிகர்களையே அதிர்ச்சி அடைய செய்தது.

ஒரு பக்கம் அவரது அழகை புகழ்ந்து பாராட்டினாலும், மறுபக்கம் 'இந்த வயதில் இதெல்லாம் தேவையா?' என்று ரசிகர்கள் விமர்சிக்கவும் செய்கிறார்கள்.

ஆனாலும் ஸ்ரேயா தனது பாதையில் இருந்து பின்வாங்க போவதில்லை என முடிவெடுத்துள்ளார். மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி என மொத்தம் 6 படங்களில் அவர் நடித்தும் வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com