காதல் முறிவை உறுதிப்படுத்தினாரா சுருதிஹாசன்?

image courtecy:instagramshrutzhaasan
இணையதளத்தில் தனது ரசிகர்களுடனான உரையாடலின்போது நான் சிங்கில்தான் என்று சுருதிஹாசன் கூறினார்.
சென்னை,
நடிகை சுருதிஹாசன், சாந்தனு என்ற டாட்டூ ஆர்டிஸ்ட்டை காதலித்ததாக கூறப்பட்டது. அவ்வப்போது, சாந்தனுவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்து வந்தார் சுருதிஹாசன். 'திருமணம் எப்போது?' என்ற கேள்வி எழும்போதெல்லாம் பதில் சொல்லாமல் தவிர்த்து வந்தார் சுருதிஹாசன்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை சுருதிஹாசன், தனது காதலர் சாந்தனுவை சமூகவலைதளப் பக்கத்தில் பின்தொடர்வதை நிறுத்தினார். மேலும், சாந்தனுவுடன் இருக்கும் தனது பிறந்தநாள் கொண்டாட்டம், தமிழ் புத்தாண்டு என பகிர்ந்த அனைத்துப் புகைப்படங்களையும் தனது பக்கத்தில் இருந்து நீக்கினார். இதனால், இருவருக்குள்ளும் பிரேக்கப்பா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், நடிகை சுருதி ஹாசன் காதல் முறிவடைந்ததை உறுதிபடுத்தியுள்ளார். இதனை இணையதள பக்கத்தில் தனது ரசிகர்களுடனான உரையாடலின்போது தெரிவித்துள்ளார். அப்போது ஒரு ரசிகர் சிங்கிலா? அல்லது கமிட்டடா? என்று கேட்டார் அதற்கு சுருதி ஹாசன், இந்த கேள்விக்கு பதிலளிக்க விரும்பவில்லை. ஆனால், நான் சிங்கில்தான். கமிட்டடாக விரும்பவில்லை. வேலை செய்து என் வாழ்க்கையை அனுபவித்து வருகிறேன். நன்றி. இவ்வாறு கூறினார்.






