துல்கர் சல்மான் படத்தில் இணைந்த சுருதி ஹாசன்

சுருதி ஹாசன் நடிக்கும் 'ஆகாசம்லோ ஒக தாரா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலானது.
துல்கர் சல்மான் படத்தில் இணைந்த  சுருதி ஹாசன்
Published on

‘ஆகாசம்லோ ஒக தாரா’ படத்தில் சுருதி ஹாசன் ஆக்சன் நிறைந்த ஆளுமை கொண்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தப் படத்தில் ஸ்ருதியுடன் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கிறார். இவர்களின் கூட்டணி முதல்முறையாக இணைவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்தப் படத்தை பவன் சாதினேனி இயக்குகிறார்.

சுருதி ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் ‘ஆகாசம்லோ ஒக தாரா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டரில் சுருதி ஹாசன் இதுவரை பார்த்திராத ஒரு தோற்றத்தில் இருக்கிறார். குறிப்பாக, வாயில் சிகரெட் வைத்திருப்பது போன்ற காட்சி சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது

இது தெலுங்கில் உருவாகும் படமாக இருந்தாலும், துல்கர் சல்மான் மற்றும் ஸ்ருதி ஹாசனுக்கு பான் இந்தியா ரசிகர்கள் இருப்பதால் மற்ற மொழிகளிலும் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com