ஜூனியர் என்டிஆரின் புதிய படத்தில் இணையும் சுருதிஹாசன்

சுருதிஹாசன் ஜூனியர் என்டிஆரின் ‘என்டிஆர் 31’ படத்தில் ஸ்பெஷல் பாடல் ஒன்றுக்கு நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூனியர் என்டிஆரின் புதிய படத்தில் இணையும் சுருதிஹாசன்
Published on

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் கடைசியாக 'தேவரா' படத்தில் நடித்திருந்தார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்தது.இப்படத்தை தொடர்ந்து, பாலிவுட்டில் 'வார் 2' படத்தில் நடித்து வருகிறார்.

'கே.ஜி.எப்' படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'என்டிஆர் 31' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் நந்தமுரி தரகா ராமாராவ் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளன. இதில் பிரபல கன்னட நடிகை ருக்மினி வசந்த் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

ரூ. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. ஏற்கனவே படப்பிடிப்புகளும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் கமல்ஹாசனின் மகளும், பிரபல நடிகையுமான சுருதிஹாசன் இந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் சுருதிஹாசன் ஸ்பெஷல் பாடல் ஒன்றுக்கு நடனமாட உள்ளாராம். பொதுவாகவே பிரசாந்த் நீல் தன்னுடைய படங்களில் ஐட்டம் பாடல்களை வைப்பதில்லை. ஆனால் ஜூனியர் என்டிஆரின் புதிய படத்தில் சுருதிஹாசன் நடனமாடும் பாடல் முக்கியமானதாக இருக்கும் என்றும், அது ஜூனியர் என்டிஆரின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்த உதவும் என்பதாலும் இந்த பாடலை படத்தில் வைக்க இயக்குனர் பிரசாந்த் நீல் திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சுருதிஹாசன், ஜூனியர் என்டிஆருடன் இணைந்து 'ராமய்யா வஸ்தாவையா' படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com