ஹீரோவுக்கு இணையாக நடிகைக்கும் சம்பளம் - சுருதிஹாசன் விருப்பம்

ஹீரோவுக்கு இணையாக நடிகைக்கும் சம்பளம் - சுருதிஹாசன் விருப்பம்
Published on

கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் வேண்டும் என்று கதாநாயகிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள். பிரியங்கா சோப்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில் ஹீரோவுக்கு இணையாக தனக்கு சம்பளம் கிடைத்துள்ளது என்றும், இந்த உயரத்துக்கு வர தனக்கு 20 ஆண்டுகள் ஆகி உள்ளது என்றும் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து நடிகை சுருதிஹாசனிடம் கேட்டபோது, "பிரியங்கா சோப்ரா ஹீரோவுக்கு இணையான சம்பளம் பெற்றதன் மூலம் அற்புதத்தை நிகழ்த்தி இருக்கிறார். ஹாலிவுட் ஹீரோவுக்கு சமமான சம்பளத்தை அவர் வாங்கியதாக தெரிவித்து இருப்பது பெருமையாக உள்ளது.

நாங்கள் எல்லாம் இன்னும் உழைத்துக்கொண்டு இருக்கிறோம். நமது சினிமா துறையில் சமமான சம்பளம் குறித்து எந்த பேச்சும் எழுவது இல்லை.

ஹீரோக்களுக்கு சமமான சம்பளம் கதாநாயகிகளுக்கு கிடைக்கும் நாள் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்'' என்று பதில் அளித்தார்..

சுருதிஹாசன் கேன்ஸ் பட விழாவில் பங்கேற்று உள்ளார். அவர் கூறும்போது, "நான் நடித்துள்ள தி ஐ என்ற சர்வதேச படத்துக்காக கேன்ஸ் பட விழாவில் பங்கேற்கிறேன். வித்தியாசமான கலாசாரங்களை பிரதிபலிக்கும் கேன்ஸ் பட விழாவில் நம் நாட்டின் ஒரு பிரதிநிதியாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com