சுருதிஹாசன் பிறந்தநாள் - சிறப்பு வீடியோ வெளியிட்ட 'டிரெயின்' படக்குழு!

நடிகை சுருதிஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று அவர் நடிக்கும் ‘டிரெயின்’ திரைப்படத்தின் சிறப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
சுருதிஹாசன் பிறந்தநாள் - சிறப்பு வீடியோ வெளியிட்ட 'டிரெயின்' படக்குழு!
Published on

சென்னை,

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'டிரெயின்' படத்தில் நடிகை சுருதிஹாசன் , நரேன் ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடிக்கின்றனர். இயக்குநர் மிஷ்கின் இயக்கும் 'டிரெயின்' படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் 'வி கிரியேஷ்ன்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு இயக்குநர் மிஷ்கினே இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரே இரவில் ரெயிலில் நிகழும் சம்பவத்தின் பின்னணியில் டார்க் திரில்லர் ஜானரில் 'டிரெயின்' படம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சுருதிஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, 'டிரெயின்' திரைப்படத்தின் சிறப்பு கிளிம்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் சுருதிஹாசன் பாடும் பாடல் இடம்பெற்றுள்ளது. இறுதியாக அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி அந்த வீடியோ நிறைவடைகிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com