தனது திருமணம் குறித்து தைரியமாக மனம் திறந்த ஸ்ருதி ஹாசன்

சீக்கிரத்தில் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை என நடிகை ஸ்ருதி ஹாசன் கூறி உள்ளார். #ShrutiHaasan
தனது திருமணம் குறித்து தைரியமாக மனம் திறந்த ஸ்ருதி ஹாசன்
Published on

பாய்பிரண்டுடன் திருமணம் என்று வரும் கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ஸ்ருதி. இதுபற்றி அவர் கூறியதாவது

'சீக்கிரத்தில் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை. ஆனால் என்னுடைய உறவை (காதல்) எனது பர்சனல் விஷயமாகவே பார்க்கிறேன். எனது பெற்றோர் சினிமா பிரபலங்களாக இருக்கும்போது நான் தனிப்பட்ட வாழ்க்கை நடத்தினால் அதை செய்தியாக்கி விடுவார்கள். ஆனால் கவலைப்படாதீர்கள் சமீபத்தில் மோதிரமோ அல்லது மாலைகளை நான் பரிமாறவில்லை. இப்போது வரை நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இவ்வாறூ அவர் கூறினார்.

. இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்று ஸ்ருதி கூறியதையடுத்து அவர் புதிய படங்களில் நடிக்க விரைவில் ஒப்புக்கொள்வார் என்று தெரிகிறது. வழக்கமான கதாபாத்திரமாக இல்லாமல் மாறுபட்ட வாய்ப்புகளை ஏற்கவே முடிவு செய்துள்ளாராம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com