தருண் தேஜா இயக்கத்தில் சுருதிஹாசன் நடிக்கும் புதிய படம்

பிரபாஸுடன் ‘சலார்’ பார்ட் 2 படத்தில் சுருதிஹாசன் நடித்து வருகிறார்.
தருண் தேஜா இயக்கத்தில் சுருதிஹாசன் நடிக்கும் புதிய படம்
Published on: 

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகியாக சுருதிஹாசன் நடிக்கிறார். இப்படத்தை தருண் தேஜா இயக்குகிறார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சுருதிஹாசன். நடிகை, பின்னணிப் பாடகி, இசையமைப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்ட இவர், நடிகர் கமல்ஹாசன் - நடிகை சரிகா தம்பதியின் மூத்த மகள் ஆவார்.

குழந்தை நட்சத்திரமாக 'ஹே ராம்' திரைப்படத்தில் அறிமுகமான இவர், 2009-ம் ஆண்டு வெளியான 'லக்' என்ற இந்திப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வருகிறார். பிரபாஸுடன் ‘சலார்’ பார்ட் 2 படத்தில் சுருதிஹாசன் நடித்து வருகிறார்.

துல்கர் சல்மானுடன் சுருதி நடித்த, ‘ஏஓடி’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வணிக ரீதியாகவும் வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது. மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சுருதிஹாசன் நடித்துள்ள ‘டிரெயின்’ படம் டிசம்பர் 4ம் தேதி வெளியாகவுள்ளது.

தேஜா இயக்கத்தில் சுருதிஹாசன்

இந்த நிலையில், ‘அஸ்வின்ஸ்’ திரைப்படத்தை இயக்கிய தருண் தேஜா இயக்கத்தில் சுருதிஹாசன் நடிக்க உள்ளார். இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் உருவாகும் எனத் தெரிகிறது.

X