1 கோடி பார்வைகளைக் கடந்த சுருதிஹாசனின் 'இனிமேல்' ஆல்பம் பாடல்

நடிகை சுருதிஹாசனின் 'இனிமேல்’ ஆல்பம் பாடல் 1 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
1 கோடி பார்வைகளைக் கடந்த சுருதிஹாசனின் 'இனிமேல்' ஆல்பம் பாடல்
Published on

சென்னை,

லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் ஸ்பெஷலாக கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இன்டிபென்டன்ட் ஆல்பம் பாடலுக்கான பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது. சுருதி ஹாசன் இசையில் கமல்ஹாசனின் பாடல் வரிகளில் லோகேஷ் கனகராஜ் நடித்திருந்தார். 

நடிகையும் இசையமைப்பாளருமான சுருதி ஹாசனின் வடிவமைப்பில் உருவான 'இனிமேல்' ஆல்பம் பாடல் தற்போது யூடியூப்பில் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. கடந்த மார்ச் 25-ம் தேதி வெளியான இந்தப் பாடல் அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

சுருதி மற்றும் லோகேஷ் ஆகியோரின், ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் நடிப்பில், இந்தப் பாடல், இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்க்கையை படம்பிடித்து காட்டுகிறது.

இந்த ஆல்பம் பாடல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. 'இனிமேல்' பாடல் மாடர்ன் உலக இளைஞர்களின் காதலின் அனைத்து நிலைகளையும் அதன் அனைத்து ஏற்ற இறக்கங்களுடனும் சித்தரிக்கிறது.

இப்பாடல் ஒரு சமகால காதலின் வடிவத்தை கச்சிதமாகப் படம்பிடித்துள்ளது. இது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்திழுக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com