நடிகை உள்பட 40 பேரை ஏமாற்றிய கும்பல்

வங்கியில் கேஒய்சி, பான் விபரங்களை அப்டேட் செய்வது மிகவும் முக்கியம் என்பதால், இந்த மோசடி கும்பல் வலையில் 40க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் விழுந்துள்ளனர்.
நடிகை உள்பட 40 பேரை ஏமாற்றிய கும்பல்
Published on

மும்பை

மும்பையில் ஒரு தனியார் வங்கியை சேர்ந்த வாடிக்கையாளர்கள் 40க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு ஒரு மோசடி கும்பல் கேஒய்சி, பான் விபரங்கள் அப்டேட் குறித்து ஒரு லிங்க் உடன் மெசேஜ் அனுப்பியுள்ளது. இந்த லிங்க்-ஐ கிளிக் செய்த அனைத்து வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்தும் பணம் களவாடப்பட்டு உள்ளது.

வங்கியில் கேஒய்சி, பான் விபரங்களை அப்டேட் செய்வது மிகவும் முக்கியம் என்பதால், இந்த மோசடி கும்பல் வலையில் 40க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் விழுந்துள்ளனர். இந்த நிலையில் மும்பை போலீஸ் அதிகாரிகள் மக்களுக்கு வங்கி தரவுகள் குறித்து வரும் மெசேஜ்-ல் இருக்கும் லிங்க்-களை கிளிக் செய்ய கூடாது என ஆலோசனை வழங்கி உள்ளனர்.

பாதிக்கப்பட்ட 40 வாடிக்கையாளர்களில் டிவி நடிகை சுவேதா மேனனும் ஒருவர் இவர் அளித்த புகாரில் இந்த போலி மெசேஜ்-ல் குறிப்பிட்ட லிங்க்-ஐ கிளிக் செய்து தகவல்களை பதிவு செய்த உடனே, வங்கி தரப்பில் இருந்து அழைப்பு வந்ததாகவும், இந்த அழைப்பில் பேசியவர் ஒடிபியை பதிவிட சொன்னதால் பதிவிட்ட அடுத்த சில நிமிடத்தில் தனது வங்கி கணக்கில் இருந்து 57,636 ரூபாய் டெபிட் செய்யப்பட்டதாக தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com