சிபிராஜ் நடித்துள்ள 'மாயோன்' படத்தின் டிரைலர் வெளியீடு..!

நடிகர் சிபிராஜ் நடித்துள்ள 'மாயோன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
சிபிராஜ் நடித்துள்ள 'மாயோன்' படத்தின் டிரைலர் வெளியீடு..!
Published on

சென்னை,

அறிமுக இயக்குனர் கிஷோர் இயக்கத்தில் நடிகர் சிபிராஜ் நடித்துள்ள திரைப்படம் 'மாயோன்'. இந்த படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் ராதாரவி, கே.எஸ்.ரவிகுமார், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மாயோன் திரைப்படத்தை டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கிறார். ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் பார்வையற்றவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் ஆடியோ விளக்கத்துடன் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரம்மாண்டமான பொருட்செலவில் பழங்கால கோவில் ஒன்றை கதைக்களமாகக் கொண்டு மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள மாயோன் திரைப்படம் வருகிற ஜூன் 24-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் மாயோன் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com