சித்தார்த்தின் "3 பிஎச்கே" படப்பிடிப்பு நிறைவு!

ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள ‘3 பிஎச்கே’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.
சித்தார்த்தின் "3 பிஎச்கே" படப்பிடிப்பு நிறைவு!
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'மிஸ் யூ'. 7 மைல்ஸ் பெர் செகண்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பில் என்.ராஜசேகர் இயக்கிய இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

அதனை தொடர்ந்து நடிகர் சித்தார்த் '3 பிஎச்கே' படத்தில் நடிக்கிறார். இது சித்தார்த்தின் 40-வது படமாகும். இந்த படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்குகிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சித்தார்த்துடன் மீதா ரகுநாத், சைத்ரா, சரத்குமார் மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைக்கிறார். சித்தார்த்தின் 40-வது படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைக்கிறார். அம்ரித் ராம்நாத் கடந்தாண்டு வெளியான வருஷங்களுக்கு சேஷம் என்ற மலையாள திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் 3 BHK வீடு வாங்க ஆசைப்படும் குடும்பத்தின் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் கோடை விடுமுறையை ஒட்டி வெளியாக இருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com