சித்தார்த்தின் 40வது படம் - புகைப்படம் வெளியிட்டு படக்குழு அறிவிப்பு

சித்தார்த்தின் 40-வது படம் குறித்த அறிவிப்பை படக்குழு புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளது.
சித்தார்த்தின் 40-வது படம்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் சித்தா. இப்படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கினார்.

இப்படத்தை நடிகர் சித்தார்த், தனது இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்திருந்தார். இப்படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்தார். இப்படம் கடந்த வருடம் செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பலரும் இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், சித்தார்த்தின் 40-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கவுள்ளார். இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது குறித்து புகைப்படம் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com