மறைந்த பாடகர் சித்து மூஸேவாலாவின் 3 புதிய பாடல்கள் வெளியீடு


தினத்தந்தி 13 Jun 2025 4:27 PM IST (Updated: 13 Jun 2025 4:28 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சாபில் படுகொலை செய்யப்பட்ட ராப் பாடகர் சித்து மூஸேவாலாவின் 32-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 3 புதிய பாடல்கள் வெளியானது.

பஞ்சாபி பாடகரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சித்து மூஸேவாலா என்று அழைக்கப்படும் சுப்தீப் சிங் சித்து மன்சா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 6 மர்ம நபர்களால் கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார்.சித்து மூஸேவாலா உள்பட 424 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த விஐபி பாதுகாப்பை பஞ்சாப் காவல்துறை தற்காலிகமாக விலக்கிக் கொண்ட மறுநாளே இந்த கொலைச் சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவரது 32வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது யூடியூப் பக்கத்தில் மூன்று புதிய பாடல்கள் சமீபத்தில் வெளியானது. 0008, நீல், டேக் நோட்ஸ் ஆகிய பாடல்கள் வெளியாகியுள்ளன. மூன்று பாடல்களுமே 1 கோடி பார்வைகளைக் கடந்து அசத்தி வருகிறது. ராப் பாடகரான இவருக்கு இந்தியா உள்பட வெளிநாடுகளிலும் ரசிகர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. சித்து மூசேவாலா இறந்தபிறகு இதுவரை 11 பாடல்கள் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story