தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 'எஸ்.டி.ஆர் 49' பட அப்டேட் கொடுத்த சிம்பு

'எஸ்.டி.ஆர் 49' படத்தை 'பார்க்கிங்' திரைப்பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க உள்ளார்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 'எஸ்.டி.ஆர் 49' பட அப்டேட் கொடுத்த சிம்பு
Published on

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் தற்போது இயக்குனர் மணி ரத்னம் இயக்கியுள்ள "தக் லைப்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூன் 5-ந் தேதி வெளியாக உள்ளது.

அதனை தொடர்ந்து, 'பார்க்கிங்' திரைப்பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 'எஸ்டிஆர் - 49' படத்திலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்டிஆர் - 50' திரைப்படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'எஸ்டிஆர் - 51' படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையக்கவுள்ளார். இந்தநிலையில், தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு நடிகர் சிம்பு 'எஸ்டிஆர் - 49' படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், 'எஸ்டிஆர் - 49' படத்திற்கான இசை பணிகளை இன்று முதல் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com