சுந்தர் சி - வடிவேலு நடித்த "கேங்கர்ஸ்" படத்திற்கு சிம்பு பாராட்டு!

சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள 'கேங்கர்ஸ்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சுந்தர் சி - வடிவேலு நடித்த "கேங்கர்ஸ்" படத்திற்கு சிம்பு பாராட்டு!
Published on

சென்னை,

சுந்தர்.சி - வடிவேலு கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் 'கேங்கர்ஸ்'. சுமார் 15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக கேத்ரின் தெரசா நடித்துள்ளார். மேலும் ஹரிஷ் பெரடி, மைம் கோபி, முனிஸ்காந்த், பக்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.இதில் வடிவேலு பல கெட்டப்புகளில் நடித்துள்ளார். குறிப்பாக பெண் வேடமிட்டும் நடித்துள்ளார். சமீபத்தில் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. 

நேற்று திரையரங்குகளில் இப்படம் வெளியானது. படப்பிடிப்பில் நடந்த சுவாரசியங்களை ஸ்பாட்லைட் வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் படத்தைப் பார்த்த சிம்பு படக்குழுவைப் பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.அவர் வெளியிட்டிருந்த பதிவில், "'கேங்கர்ஸ்' படம் பார்த்தேன். ஒரே சிரிப்பு சரவெடிதான். வடிவேலு  சார் மேஜிக்கால் மொத்த படத்தையும் தன்வசப்படுத்திவிட்டார். சுந்தர் .சி அண்ணாவுக்கும் படக்குழுவிற்கும் என்னுடைய வாழ்த்துகள்" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com