ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய சிம்பு

இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்தார்.
ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய சிம்பு
Published on

பிரபல இயக்குநரான பா.ரஞ்சித் 'வேட்டுவம்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நாகப்பட்டினம் பகுதியில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 13ம் தேதி கார் சண்டைக்காட்சியின்போது விபத்தில் சிக்கி பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் (வயது 52) உயிரிழந்தார்.

இதனையடுத்து அலட்சியமாக செயல்பட்டது, கவனக்குறைவாக இருந்தது என இயக்குநர் பா. ரஞ்சித், ராஜ்கமல், வினோத், பிரபாகரன் ஆகிய நான்கு பேர் மீது 3 பிரிவுகளில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் இறப்பு திரையுலகை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது. இவரது குடும்பத்திற்கு திரைத்துறையினர் பலரும் பல உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிம்பு அவரது குடும்பத்திற்கு 1 லட்ச ரூபாய் காசோலையை கொடுத்துள்ளார் அதை சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் சில்வா மாஸ்டர் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com