படம் வெற்றி விழாவில் சிம்புவுக்கு நினைவு பரிசு - உதயநிதி, ஐசரி கணேஷ் வழங்கினார்கள்

”வெந்து தணிந்தது காடு” படம் வெற்றி விழாவில் சிம்புவுக்கு நினைவு பரிசை உதயநிதி, ஐசரி கணேஷ் வழங்கினார்கள்.
படம் வெற்றி விழாவில் சிம்புவுக்கு நினைவு பரிசு - உதயநிதி, ஐசரி கணேஷ் வழங்கினார்கள்
Published on

நடிகர் சிம்புவுக்கு உதய நிதி ஸ்டாலின், ஐசரி கணேஷ் ஆகியோர் நினைவு பரிசு வழங்கிய காட்சி, அருகில் டைரக்டர் கவுதம் மேனன் உள்ளார்.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. இதில் சிம்பு நாயகனாக நடித்துள்ளார். கவுதம் மேனன் டைரக்டு செய்துள்ளார். இந்த படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் 50-வது நாள் வெற்றி விழா சென்னையில் நடந்தது. இதில் உதயநிதி ஸ்டாலின், ஐசரி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிம்புவுக்கு நினைவு பரிசு வழங்கினார்கள். படத்தில் நடித்துள்ள ராதிகா, சித்தி இத்னானி உள்ளிட்ட பலருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. நடிகர் சரத்குமார், டைரக்டர்கள் கவுதம் மேனன், கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே.செல்வமணி, விஜய், உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்று பேசினார்கள். சிம்பு பேசும்போது, ''தமிழில் வெளியாகும் எல்லா படங்களும் நன்றாக ஓடுகின்றன. இது மகிழ்ச்சியாக உள்ளது. வெந்து தணிந்தது காடு படத்தில் ரொம்ப மெனக்கெட்டு நடித்தேன். இந்த படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com