வெற்றிமாறனின் 'பேட் கேர்ள்' படம் வெற்றியடைய வாழ்த்திய சிம்பு

இன்று திரையரங்குகளில் வெளியான பேட் கேர்ள் படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
வெற்றிமாறனின் 'பேட் கேர்ள்' படம் வெற்றியடைய வாழ்த்திய சிம்பு
Published on

சென்னை,

காக்கா முட்டை, விசாரணை, வட சென்னை உள்ளிட்ட பல விருதுகளை வென்ற படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பேட் கேர்ள்'. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் இசையை அமித் திரிவேதி மேற்கொண்டுள்ளார். இப்படம் ஒரு டீனேஜ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது.

இன்று திரையரங்குகளில் வெளியான பேட் கேர்ள் படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் சிம்பு பேட் கேர்ள் படத்தை வாழ்த்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பேட் கேர்ள் படக்குழுவிற்கு வாழ்த்துகள். படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள். வர்ஷ பரத், வெற்றிமாறன் சார் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துகள். என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com