எளிமை, ஆளுமை திறன், கூச்சம் ; அஜித்தை பாராட்டிய வித்யாபாலன்

மறைந்த நடிகை சில்க் சுமிதா வேடத்தில் ‘த டர்டி பிக்சர்’ படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் வித்யாபாலன்.
எளிமை, ஆளுமை திறன், கூச்சம் ; அஜித்தை பாராட்டிய வித்யாபாலன்
Published on

பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் கணவனை கொலை செய்யும் பெண்ணாக நடித்த கஹாணி படமும் பெயர் வாங்கி கொடுத்தது. தெலுங்கில் வெளியான என்.டி.ராமராவ் வாழ்க்கை படத்திலும் நடித்து இருந்தார்.

தற்போது தமிழில் தயாராகும் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்குமார் ஜோடியாக நடித்து வருகிறார். இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றிகரமாக ஓடிய பிங்க் படத்தின் தமிழ் பதிப்பாக தயாராகிறது. படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. ஆகஸ்டு 8-ந்தேதி திரைக்கு வருகிறது.

அஜித்துடன் நடிப்பது குறித்து வித்யாபாலன் கூறியதாவது:-

நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்குமாருடன் நடிக்க வாய்ப்பு வந்ததும் சந்தோஷப்பட்டேன். இந்த படத்தில் எனது கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்கும். எனக்கு பாடல் காட்சியும் உள்ளது. படப்பிடிப்பில் அஜித்குமாரின் ஆளுமை திறன் என்னை கவர்ந்தது. பெரிய ரசிகர்கள் கூட்டத்தை தனக்கு பின்னால் வைத்திருக்கும் ஒருவர் என் பக்கத்தில் நிற்கிறார் என்பதை நம்பவே முடியவில்லை.

எல்லோருடனும் மிகவும் எளிமையாக பழகினார். பெண்களுக்கு பிடிக்காத விஷயங்களை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தும் அழுத்தமான கதையம்சத்தில் படம் உருவாகி உள்ளது. இந்த கதையை அஜித்குமார் போன்ற பெரிய நடிகரால்தான் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியும். தல இமேஜ் பற்றி அவரிடம் நான் பேசியபோது கூச்சப்பட்டார்.

இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com