

உலகப்புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோ நட்சத்திரமும், பாடகியுமான கிம் கர்தாஷியன், தனது தாயார் கிரிஸ் ஜென்னருக்கு கிடைத்த விளம்பர வாய்ப்புக்கு தடை போட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிம் கர்தாஷியன் தற்போது 'தி பிப்த் வீல்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பின்போது தனது மகளை சந்திக்க சென்ற கிரிஸ் ஜென்னருக்கு, பிரபல நிறுவனம் ஒரு விளம்பரத்தில் நடிக்க அழைப்பு விடுத்தது. வயது முதிர்ந்தவர்களுக்காக 'டயபர்' விளம்பரம் தான் அது. இதற்காக நல்ல சம்பளமும் பேசப்பட்டது.
இதையடுத்து கிரிஸ் ஜென்னர் இந்த விளம்பர ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நேரத்தில், அவரது மகள் கிம் கர்தாஷியன் வந்து தடுத்துவிட்டார். காரணம், ‘டயபர்' அணிந்து தனது தாயார் அந்த விளம்பரத்தில் தோன்ற வேண்டும் என்பது தானாம். அதேவேளை 'நல்ல வருமானம் கிடைக்கும்போது, அப்படி நடிப்பதில் தவறில்லையே...' என்று கிரிஸ் ஜென்னர் வருத்தப்பட்டு பேசினாராம்.