மேத்யூ தாமஸின் “நைட் ரைடர்ஸ்” படத்தில் இணைந்த பாடகர் வேடன்

நவுபல் அப்துல்லா இயக்கத்தில் மேத்யூ தாமஸ் நடித்த ‘நைட் ரைடர்ஸ்’ படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது.
மேத்யூ தாமஸின் “நைட் ரைடர்ஸ்” படத்தில் இணைந்த பாடகர் வேடன்
Published on

கொச்சி,

மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் மேத்யூ தாமஸ். இவர் கடந்த 2023-ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'லியோ' படத்தில் விஜய்யின் மகனாக நடித்து பிரபலமானார். இதனை அடுத்து இவர் தனுஷ் இயக்கத்தில் வெளியான 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.

நடிகர் மேத்யூ தாமஸ் அறிமுக இயக்குனர் நவுபல் அப்துல்லா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். இப்படத்திற்கு 'நைட் ரைடர்ஸ்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஜோதிஷ் எம் மற்றும் சுனு ஏவி ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.இந்த படத்தில் அவேஷம் பட நடிகர் ரோஷன் ஷானவாஸ் மற்றும் சரத் சபா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில், நைட் ரைடர்ஸ் படத்தில் பாடகர் வேடன் இணைந்துள்ளதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com