ஜெனிலியாவுடனான வயது வித்தியாசம் - '' எனக்கும் தெரியும், ஆனால்...''- அமீர்கான்


Sitaare Zameen Par: Aamir Khan addresses the age gap with Genelia
x

'சித்தாரே ஜமீன் பர்' படத்தில் அமீர் கானுக்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருக்கிறார்.

மும்பை,

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் அமீர்கான். இவர் தற்போது ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் 'சித்தாரே ஜமீன் பர்' என்ற படத்தில் நடித்துள்ளார். இதில், அவருக்கு ஜோடியாக நடிகை ஜெனிலியா நடித்திருக்கிறார்.

இப்படம் வருகிற வருகிற 20-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில், அவருக்கும் ஜெனிலியாவுக்கும் இடையிலான வயது வித்தியாசம் இணையத்தில் பேசு பொருளாக மாறியது. இந்நிலையில், அது குறித்த கேள்விக்கு அமீர்கான் பதிலளித்திருக்கிறார்.

அவர் கூறுகையில், "எனக்குத் தெரியும். அப்படி எனக்கும் தோன்றியது. ஆனால் படத்தில், நாங்கள் இருவரும் 40 வயதில் இருக்கும் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறோம். அவருக்கு அந்த வயதுதான். எனக்கு 60 வயது, ஆனால் இன்றைய காலகட்டத்தில், வி.எப்.எக்ஸ் நம்மிடம் உள்ளது. நடிகர்களுக்கு வயது இனி ஒரு தடையாக இருக்காது" என்றார்.

அமீர் கான் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்து சிறிது காலம் ஆகிவிட்டது. அவரது கடைசி இரண்டு படங்களான 'லால் சிங் சத்தா' மற்றும் 'தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்' ஆகியவை பெரும் ஏமாற்றங்களை அளித்தன. இதனால் அனைவரின் கண்களும் 'சீத்தாரே ஜமீன் பர்' மீது உள்ளது. இப்படம் அமீர்கானின் கம்பேக் படமாக இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

1 More update

Next Story