''கஜினி''யை முறியடித்த ''சிதாரே ஜமீன் பர்''...புதிய சாதனை படைத்த அமீர்கான்

அமீர்கான் நடித்துள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது
மும்பை,
அமீர்கானின் 'சிதாரே ஜமீன் பர்' படம் பத்து நாட்களில் சுமார் ரூ.122 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் அமீர்கானின் 6-வது அதிக வசூல் செய்த படமான 'கஜினி'யின் வாழ்நாள் வசூலை (ரூ.114 கோடி) முறியடித்து புதிய சாதனை படைத்திருக்கிறது.
தற்போது அப்படம் அமீர்கானின் மற்றொரு படமான 'தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்' (ரூ. 151.3 கோடி) வசூலை முறியடிக்கும் நோக்கில் உள்ளது.
திவி நிதி சர்மா எழுத்தில், இயக்குனர் ஆர்.எஸ். பிரசன்னா இயக்கத்தில் உருவான 'சித்தாரே ஜமீன் பர்' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இதில், அவருடன் நடிகை ஜெனிலியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மனநலம் பாதித்த மாணவர்களுக்கு, கூடைப்பந்து சொல்லி தரும் பயிற்சியாளராக அமீர்கான் நடித்துள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது
Related Tags :
Next Story






