

சுமோ என்பது குண்டு உடம்புடன் சண்டை போடுகிற வில்லனின் பெயர். சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் முதல் இந்திய படம், இது. பெரும் பகுதி காட்சிகள் ஜப்பானில் படமாக்கப்பட்டன. படத்தை பற்றி டைரக்டர் ஹோசிமின் கூறியதாவது:-
சிவாவின் வித்தியாசமான நடிப்பில், படம் உருவாகி வருகிறது. முக்கிய கதாபாத்திரங்களில் வி.டி.வி.கணேஷ், யோகி பாபு ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். குழந்தைகள் முதல் வயதானவர் வரை, ரசிக்கக் கூடிய ஜனரஞ்சகமான படம், இது.
கதாநாயகனாக நடிப்பதுடன், படத்தின் திரைக்கதை-வசனத்தையும் சிவாவே எழுதியிருக்கிறார். படம் வேகமாக வளர்ந்து வருகிறது.