18 ஆண்டுகளை நிறைவு செய்த 'சிவாஜி' திரைப்படம்


18 ஆண்டுகளை நிறைவு செய்த சிவாஜி திரைப்படம்
x

ஷங்கர் இயக்கிய சிவாஜி திரைப்படம் இன்று வரை மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.

சென்னை,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான படம் 'சிவாஜி'. இந்த படத்தினை பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார். ரஜினி மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவான முதல் படம் இதுவாகும். இந்த படத்தில் நடிகை ஸ்ரேயா கதாநாயகியாக நடித்திருந்தார். சுமன் வில்லனமாக நடித்திருந்தார்.

ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் விவேக், மணிவண்ணன், வடிவுக்கரசி, ரகுவரன், சாலமன் பாப்பையா, உமா பத்மநாபன் என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். நடிகை நயன்தாரா ஒரே ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடி இருந்தார். இந்திய திரையுலகமே திரும்ப பார்க்க செய்த இப்படம் தமிழ் சினிமாவில் முதலில் ரூ.100 கோடி வசூல் செய்த படம் என்ற சாதனையை பெற்றுள்ளது. இன்று வரை மக்கள் மனதில் இருந்து நீங்காத இடத்தை பிடித்துள்ளது.

2007ம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இன்று வரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இன்றுடன் இப்படம் வெளிவந்து 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை ரஜினியின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

1 More update

Next Story