பத்மஸ்ரீ விருது பெற்ற சாலமன் பாப்பையாவுக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து

பத்மஸ்ரீ விருது பெற்ற சாலமன் பாப்பையாவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பத்மஸ்ரீ விருது பெற்ற சாலமன் பாப்பையாவுக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து
Published on

சென்னை,

நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது. பத்ம விருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றது. 

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 119 பேருக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தப் பட்டியலில் 7 பத்ம விபூஷன், 10 பத்ம பூஷன் மற்றும் 102 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில், பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

தமிழகத்தை சேர்ந்த பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா, இயற்கை விவசாயி பாப்பம்மாள், கூடைப்பந்து வீராங்கனை அனிதா, பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. பிரபல பின்னணிப் பாடகி சித்ராவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. விருது பெற்றவர்களுக்கு பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள சாலமன் பாப்பையாவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில் கல்லூரி நாட்கள் முதல் என் பல குரல் நிகழ்ச்சியை உங்கள் குரலில்தான் தொடங்குவேன், என்றும் உங்கள் ரசிகனாக என் மனமார்ந்த வாழ்த்துகள் அய்யா என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com