நண்பர்களுடன் 'அஜித்' பட பாடலை பாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன் - வைரல் வீடியோ


Sivakarthikeyan enjoys singing o sona song - Viral video
x
தினத்தந்தி 8 April 2025 6:58 AM IST (Updated: 8 April 2025 2:44 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் சிவகார்த்திகேயன், 'ஓ சோனோ' பாடலை அவரின் நண்பர்களுடன் பாடி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், அஜித் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டி வெளியான 'வாலி' திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஓ சோனோ' பாடலை அவரின் நண்பர்களுடன் பாடி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்திருக்கிறார். திரிஷா கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் வருகிற 10-ம் தேதி வெளியாக உள்ளது.

1 More update

Next Story