

சென்னை,
இந்தப் பரிசைப் பெற்றுக்கொண்ட ராம்குமார் பாலகிருஷ்ணன், அது தொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தற்போது சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் 'சேயோன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தை, 'பார்க்கிங்' படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். தற்காலிகமாக 'எஸ்கே 27' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், 'எஸ்கே 27' படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் புத்தம் புதிய ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் (iPhone 18 Pro Max) செல்போனைப் பரிசாக வழங்கியுள்ளார்.
இந்தப் பரிசைப் பெற்றுக்கொண்ட ராம்குமார் பாலகிருஷ்ணன், அது தொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கல்லூரிப் பின்னணியில் அதிரடி கலந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக 'எஸ்கே 27' உருவாகி வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கயாடு லோகர் நடிக்கிறார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
'பார்க்கிங்' படத்தின் மூலம் கவனம் பெற்ற ராம்குமார் பாலகிருஷ்ணன், சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.