சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் மலையாள இயக்குனர்?


Sivakarthikeyan likely to do a film with this Malayalam director
x

தற்போது சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

தற்போது சிவகார்த்திகேயன் 'சூரரைப் போற்று' படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' படத்தில் நடித்து வருகிறார். மேலும், அட்லீ-அல்லு அர்ஜுன் படத்தில் நடிப்பதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி வெற்றிப்பெற்ற '2018' படத்தை இயக்கிய ஜுட் ஆண்டனி சிவகார்த்திகேயனுடன் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.


1 More update

Next Story