"விக்ரம் வேதா" இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்?

இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
"விக்ரம் வேதா" இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்?
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமான 'மதராஸி' திரைப்படத்தில் நடித்துள்ளார். மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 'குட் நைட்' படம் மூலம் கவனிக்கப்பட்ட இயக்குநர் விநாயக் சந்திரசேகர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,

இந்த நிலையில், தமிழின் முன்னணி இயக்குநர்கள் இணையான புஷ்கர் - காயத்ரி நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கதை சொன்னதாகவும் அது சிவகார்த்திகேயனுக்கு பிடிக்க முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. .ஓரம் போ, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களால் கவனிக்கப்பட்ட புஷ்கர் - காயத்ரி சுழல் தொடருக்கு கதை எழுதி பெரிதாகப் பாராட்டுகளைப் பெற்றனர். இவர்களுடன் சிவகார்த்திகேயன் இணையவுள்ள தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com