'எஸ்.கே 24' - சிவகார்த்திகேயனுக்கு தந்தையாக நடிக்கும் மோகன்லால்?

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை(எஸ்.கே 24) விநாயக் சந்திரசேகரன் இயக்க இருப்பதாக தெரிகிறது.
Sivakarthikeyan, Mohanlal coming through with SK24
Published on

சென்னை,

இன்று தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான 'மதராஸி' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 5-ம்தேதி வெளியாக உள்ளது.

தற்போது, சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை(எஸ்.கே 24) விநாயக் சந்திரசேகரன் இயக்க இருப்பதாகவும் அப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.

தந்தை-மகன் பிணைப்பை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக இருப்பதாக தெரிகிறது. இதில் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லாலுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது,

X

Daily Thanthi
www.dailythanthi.com