மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் சிவகார்த்திகேயன் அஞ்சலி

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்ற்கு சென்று நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் சிவகார்த்திகேயன் அஞ்சலி
Published on

பெங்களூரு,

கர்நாடக திரையுலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென மாரடைப்பால் காலமானார். இளம் வயதில் அவர் மரணமடைந்தது ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரையே மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அவரது இறுதிச் சடங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புனித் ராஜ்குமாரின் உடல் அவர் தாய் மற்றும் தந்தையின் நினைவிடத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து திரையுலகினர் மற்றும் லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரது உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்ற்கு சென்று நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் புனித்தின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து தனது இரங்கலை தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன், புனித் ராஜ்குமார் மரணம் அடைந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வு தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக கூறினார். பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விருது விழாவின் போது புனித் தன்னை ஊக்குவித்த நேரத்தை அவர் நினைவு கூர்ந்தார்.

அவரது மறைவு ஒட்டுமொத்த சினிமா உலகிற்கும் பேரிழப்பாகும். நல்ல செயல்களுக்காக அவர் நினைவுகூரப்படுவார். என்னைப் போன்ற பலருக்கு அவர் ஒரு முன்மாதிரி. அவர் எப்போதும் திரையிலும் வெளியிலும் மக்களை ஊக்கப்படுத்தினார், என்று சிவகார்த்திகேயன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com