சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிக்கும் 'கொட்டுக்காளி' படத்தின் பர்ஸ்ட்-லுக் டீசர் வெளியீடு

சூரி நடித்துள்ள 'கொட்டுக்காளி' திரைப்படத்தின் பர்ஸ்ட்-லுக் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிக்கும் 'கொட்டுக்காளி' படத்தின் பர்ஸ்ட்-லுக் டீசர் வெளியீடு
Published on

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கொட்டுக்காளி'. இப்படத்தை கூழாங்கல் திரைப்படத்தை இயக்கியிருந்த பி.எஸ்.வினோத்ராஜ் இயக்குகிறார். மேலும் படிக்க

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், திரைப்படங்கள் தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.

அடுத்ததாக தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 'கொட்டுக்காளி' என்ற படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். 'கூழாங்கல்' படத்தின் இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கும் இப்படத்தில் சூரி மற்றும் மலையாள நடிகை அன்னா பென் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று காலை வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'கொட்டுக்காளி' திரைப்படத்தின் பர்ஸ்ட்-லுக் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள 'விடுதலை' படத்தின் டிரையிலர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan Productions (@SKProdOffl) March 10, 2023 ">Also Read:

X

Daily Thanthi
www.dailythanthi.com