சம்பளத்தை குறைத்த சிவகார்த்திகேயன்

சம்பளத்தை குறைத்த சிவகார்த்திகேயன்
Published on

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் டாக்டர், டான் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பை பெற்றன. ஆனால் அதன்பிறகு வந்த பிரின்ஸ் படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இதையடுத்து வினியோகஸ்தர்களுக்கு சிவகார்த்திகேயன் நஷ்டஈடு வழங்கியதாக கூறப்பட்டது.

தற்போது அயலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ரீலீசுக்காக காத்து இருக்கிறது. தொடர்ந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். கமல்ஹாசன் தயாரிக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார். இதில் ஜோடியாக நடிக்க சாய்பல்லவியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்தநிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சிவகார்த்திகேயனை ஒப்பந்தம் செய்து உள்ளதாகவும், இந்த படத்துக்கு சிவகார்த்திகேயன் வழக்கமாக வாங்கும் சம்பளத்தைவிட ரூ.5 கோடியை குறைத்து கொண்டதாகவும் இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது. முந்தையை பிரின்ஸ் படத்தின் தோல்வி காரணமாக சம்பளத்தை அவர் குறைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com