"சின்னதா ஒரு படம்" பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிவகார்த்திகேயன்


சின்னதா ஒரு படம் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
x

'சின்னதா ஒரு படம்' வருகிற ஜூலை மாதம் வெளியாக உள்ளது.

சென்னை,

இயக்குனரான ஜானி டிசோசா இயக்கியுள்ள முதல் படம் 'சின்னதா ஒரு படம்'. வித்யாசமான தலைப்பு கொண்ட இந்த படத்தில் விதார்த், பூஜா தேவரையா, பிரசன்னா, ரோகிணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சிறப்பு தோற்றத்தில் சந்தானம், குரு சோமசுந்தரம், ரோபோ சங்கர், மற்றும் பால சரவணன் நடித்துள்ளனர். இந்த படத்தினை திருச்சித்திரம் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்தன. இப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாக உள்ளது.

நான்கும் வேறுபட்ட கதைகளங்களையும், சுவாரஸ்யமான கதாப்பாத்திரங்களையும் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story