சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு

இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு
Published on

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான 'அயலான்' திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை 'ரங்கூன்' திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இந்த படத்திற்கு அமரன் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளன.

இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இந்நிலையில் இன்று சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு அமரன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை பட நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com