எஸ்.கே 23 - புகைப்படம் வெளியிட்டு அப்டேட் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் எஸ்.கே. 23 படத்தில் நடித்து வருகிறார்.
image courtecy:instagram@a.r.murugadoss
image courtecy:instagram@a.r.murugadoss
Published on

சென்னை,

'அயலான்' திரைப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை 'ரங்கூன்' திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இந்த படத்திற்கு அமரன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் எடுக்கப்பட்டுள்ளன.

தற்போது, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக எஸ்.கே. 23 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு அப்டேட் கொடுத்துள்ளார். அதில் மானிட்டர் முன்னால் ஏ.ஆர்.முருகதாஸ் அமர்ந்திருக்கிறார். கேமராவின் முன்னால் சிவகார்த்திகேயன் நடித்துக்கொண்டிருக்கிறார். சிவகார்த்திகேயன் அதில் அடர்த்தியான தாடியுடன் காணப்படுகிறார்.

இதன் மூலம் ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயனின் முதல் தோற்றத்தை மறைமுகமாக வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. எஸ்.கே. 23 படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com