ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த சிவகார்த்திகேயனின் “மதராஸி”

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மதராஸி’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த சிவகார்த்திகேயனின் “மதராஸி”
Published on

சென்னை,

சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோரின் கூட்டணியில் உருவான மதராஸி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வித்யுத் ஜாம்வால் வில்லனாக நடித்திருக்கும் இந்த ஆக்சன் படத்தில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்திருக்கிறார். தயாரிப்பாளர் என்.வி. பிரசாத், ஸ்ரீ லட்சுமி மூவீஸ் சார்பில் தயாரித்துள்ளார், அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் ரிலீஸான இப்படம் 3 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 65 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் மதராஸி படம் உலகளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்திருப்பதால் வரும் நாட்களிலும் படத்திற்கான வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com