சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படப்பிடிப்பு நிறைவு


சிவகார்த்திகேயனின் பராசக்தி படப்பிடிப்பு நிறைவு
x
தினத்தந்தி 20 Oct 2025 9:08 PM IST (Updated: 3 Nov 2025 1:47 PM IST)
t-max-icont-min-icon

அடுத்தாண்டு ஜனவரி 14-ந்தேதி 'பராசக்தி' திரைப்படம் வெளியாக உள்ளது.

சென்னை

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் ‘பராசக்தி’. இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தி திணிப்பை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.

ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'பராசக்தி' படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையை ஒட்டி ஜனவரி 14-ந்தேதி 'பராசக்தி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ள படக்குழு, 'பராசக்தி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தெரிவித்துள்ளது. இதனை வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.


1 More update

Next Story